ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் உலகமா? உண்மை என்ன?

 

ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் உலகமா? உண்மை என்ன?

திருச்சி சிறுகனூர் அருகே பெரியார் உலகம் அமைக்கப்பட இருக்கிறது என்று திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடந்த 30ஆம் தேதி அன்று திராவிடர் கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ அமைய இருக்கிறது. இதில் பெரியாரின் 95 அடி உயர சிலை அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழ்நாடு அரசின் உத்தரவை அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் உலகமா? உண்மை என்ன?

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தும் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு ரூ.100 கோடியில் சிலை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். பெரியார் யார்? பெயர் வைப்பதற்காக, வீட்டில் சாப்பாடு போட, திருமணத்தில் கலந்துகொள்ள கூட காசு வாங்கியவர்தான் பெரியார். தன் மீது வீசப்பட்ட செருப்புகளை எல்லாம் சேர்த்து வைத்து ஜோடி அரையணா என்று விற்று பள்ளி கல்லூரிகளை உருவாக்கினார்.

அது இப்போது யாரிடமோ கை மாறிவிட்டது. குஜராத்தில் 3 ஆயிரம் கோடியில் படலேலுக்கு வைக்கப்பட்ட சிலைக்கும் போது அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கும் என்ன மாறுபாடு இருக்கிறது. தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே தமிழகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது . இதற்கு மேலும், சிலை வைப்பது என்பது பெருமைக்கு எருமை மேய்க்கும் செயல்தான் . பெரியாரே இதை விரும்பமாட்டார். விரட்டி விரட்டி கம்பால் அடித்திருப்பார் என்றார்.

ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் உலகமா? உண்மை என்ன?

பெரியாருக்கு பெரும் சிலை வைப்பது கண்டு சீமானுக்கு எவ்வளவு ஆத்திரம். இதிலேதான் சங்கிகளுக்கும் சீமான்களுக்கும் இடையிலான கூட்டு பளிச்செனத் தெரிகிறது என்றார் மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்.

இந்நிலையில் திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ் இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறது. பெரியார் உலகம் என்பது பெரியார் சிலை மட்டுமல்ல, இருபத்தி ஏழு ஏக்கர் கொண்ட அந்த நிலப்பரப்பில் 40 அடி பீடம் 95 அடி உயர பெரியார் சிலை மற்றும் தந்தை பெரியார் ஒலி -ஒளிக் காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், பெரியார் படிப்பகம், நூலகம் , அறிவியல் கண்காட்சி, கோளரங்கம் , குழந்தைகளுக்கான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பூங்கா, உணவகம் , வாகனம் நிறுத்தத்திற்கு வசதிகளுடன் கூடிய இடம் உள்ளிட்டவை அடங்கியது தான் பெரியார் உலகம். பெரியார் சிலை மட்டும் ரூ.100 கோடியில் அமைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் ரூ.100 கோடியில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.