உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

 

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி நள்ளிரவு ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெசியா(30), நாகராஜ்(52), செந்தில்குமார்(32) மற்றும் சாம்சன் டார்வின்(28) ஆகிய 4 மீனவர்களும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீனவர்களின் படகில் மோதிவிட்டு அங்கிருந்து சென்றதில், படகின் பின்பக்கம் தண்ணீர் புகுந்து 4 மீனவர்களும் மாயமாகினர். இதனையறிந்த மீன்வளத்துறை 3 விசைப்படகுகளில் காணாமல் போன மீனவர்களை தேடிச் சென்ற நிலையில், இன்று காலை 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

இலங்கை கடற்படையின் தாக்குதல் எல்லை மீறியதால் 4 உயிர்கள் பறிபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படை செயல் கண்டிக்கத்தக்கது என முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறேன் என்றும் தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் மூலம் உரிய விசாரணை நடத்த பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

மேலும், உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும், தகுதியின் அடிப்படையில் மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் பாதிப்படைந்த விசைபடகிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.