கண்டெய்னர் லாரியை கடத்தி ரூ.10 கோடி மதிப்பு செல்போன்கள் கொள்ளை!

 

கண்டெய்னர் லாரியை கடத்தி ரூ.10 கோடி மதிப்பு செல்போன்கள் கொள்ளை!

ஒசூர் அருகே லாரியை வழிமறித்து ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போன்களை ஏற்றிக் கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருக்கிறது. அந்த லாரியை திடீரென வழிமறித்த கொள்ளையர்கள், ஓட்டுநரை தாக்கி விட்டு லாரியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், லாரியில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்துக் கொண்டு லாரியை வழியிலேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கண்டெய்னர் லாரியை கடத்தி ரூ.10 கோடி மதிப்பு செல்போன்கள் கொள்ளை!

அந்த செல்போன்களின் மதிப்பு ரூ.10 கோடி என, ஓட்டுநர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. காஞ்சிபுரத்தில் இருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள், ஆந்திர மாநிலம் நகரி அருகே கொள்ளையடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நபர்களை கைது செய்த போலீசார், செல்போன்களை பறிமுதல் செய்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.