கோவையில் கடத்தப்பட்ட காரில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்- கேரள ரியல்எஸ்டேட் அதிபரிடம் விசாரணை

 

கோவையில் கடத்தப்பட்ட காரில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்- கேரள ரியல்எஸ்டேட் அதிபரிடம் விசாரணை

கோவை

கோவை அருகே கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல் சலாம்(50). இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்றுகொண்டிருந்தார். காரை சம்சுதீன்(42) என்பவர் ஓட்டிவந்தார். இந்த நிலையில், கோவை நவக்கரை அருகே சென்றபோது காரை வழிமறித்த மர்மநபர்கள், அப்துல் சலாம் மற்றும் சம்சுதீனை தாக்கி அவரிடம் இருந்த 27 லட்சம் ரூபாய் பணம், செல்போன்கள் மற்றும் காரையும் பறித்துகொண்டு தப்பியோடினர்.

கோவையில் கடத்தப்பட்ட காரில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்- கேரள ரியல்எஸ்டேட் அதிபரிடம் விசாரணை

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவை – சிறுவாணி ரோடு மாதம்பட்டி அருகே கேட்பாரற்று நின்ற அப்துல் சலாமின் காரை மீட்ட போலீசார், தொடர்ந்து பேரூர் பச்சாபாளையத்தில் சாலையோரம் கிடந்த 2 செல்போன்களையும் மீட்டனர். தொடர்ந்து, கைப்பற்றிய காரை கே.ஜி.சாவடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு அப்துல் சலாமிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கோவையில் கடத்தப்பட்ட காரில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்- கேரள ரியல்எஸ்டேட் அதிபரிடம் விசாரணை

அப்போது பணம் குறித்து முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை நடத்தினர். அதில் காரின் பின் இருக்கையின் கீழே அமைக்கப்பட்டு இருந்த ரகசிய அறையில் சுமார் 1 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு அப்துல்சலாமிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று கருதி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் நாடகமா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு நேரடியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிட்டத்தக்கது.