நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி; 4 பேரை கைதுசெய்து விசாரணை

 

நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி; 4 பேரை கைதுசெய்து விசாரணை

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வாடிக்கையாளர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் பண மோசடி செய்த, 3 நிறுவனங்களின் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி; 4 பேரை கைதுசெய்து விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் ஆனந்த், ஜெயராஜ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து, மாரியம்மன் அறக்கட்டளை நடத்தி வந்தனர். இங்கு 6 ஆயிரத்து 100 ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதனை நம்பி நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அறிவித்தபடி பணம் கட்டியவர்களுக்கு கடன் வழங்காத நிலையில், கட்டிய பணத்தை திரும்ப கேட்டபோது, அதனை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி; 4 பேரை கைதுசெய்து விசாரணை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்ட விசாரணை அடிப்படையில், மாரியம்மாள் மற்றும் நிவேதா அறக்கட்டளைகள் மற்றும் சிங்கம் மார்கெட்டிங் ஆகிய 3 நிறுவனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களான ஜெயராஜ் (51), ஆனந்த் (32), காசியம்மாள் (45), மகாலட்சுமி ஆகிய 4 பேரை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணன், வடிவேலு ஆகியோரையும் தேடி வருகின்றனர்.