பூச்செண்டுக்குள் மறைத்து ரூ.1.17 கோடி போதைப் பொருள் கடத்தல் – ஐ.டி. ஊழியர் கைது!

 

பூச்செண்டுக்குள் மறைத்து ரூ.1.17 கோடி போதைப் பொருள் கடத்தல் – ஐ.டி. ஊழியர் கைது!

சென்னை

கென்யாவில் இருந்து சென்னைக்கு தபால் பார்சலில் கடத்திவரப்பட்ட ரூ.1.17 கோடி மதிப்பிலான காட் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க நாட்டில் இருந்து தபால் பார்சல் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்திற்கு, கென்யாவின் நைரோபியில் இருந்த வந்த பார்சல்களை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பூச்செண்டுக்குள் மறைத்து ரூ.1.17 கோடி போதைப் பொருள் கடத்தல் – ஐ.டி. ஊழியர் கைது!

அப்போது, 5 பார்சல்களில் மர பூச்செண்டுகள் மற்றும் பாக்கெட்டுகளில் மறைத்து காட் என்ற போதை இலைகள் கடத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து, 5 பார்சல்களில் இருந்து சுமார் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 கிலோ 800 கிராம் காட் போதை இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேதேயுடுலிஸ் எனப்படும் இந்த காட் இலைகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் விளைவிக்கப்படும் ஒருவித போதை தரும் இலை என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சென்னையை சேர்ந்த ஐ.டி.நிறுவன ஊழியரை கைதுசெய்தனர்.