ராயபுரத்தை மீண்டும் கைப்பற்றுவாரா அமைச்சர் ஜெயக்குமார்? #Royapuram

 

ராயபுரத்தை மீண்டும் கைப்பற்றுவாரா அமைச்சர் ஜெயக்குமார்? #Royapuram

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்கவிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், பெரும்பாலானவை திமுகவுக்கே ஆதரவாக உள்ளன. இத்தகைய சூழலில், மக்களின் நிலை எப்படி இருக்கிறது? ஆளுங்கட்சிக்கு ஆதரவா? எதிர்கட்சிக்கு ஆதரவா? ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா? உள்ளிட்ட பல கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி ராயபுரம்..

ராயபுரத்தை மீண்டும் கைப்பற்றுவாரா அமைச்சர் ஜெயக்குமார்? #Royapuram

அதிமுகவின் கோட்டை:

ராயபுரம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றே சொல்ல வேண்டும். கடந்த 30 ஆண்டுகாலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 5 முறையும் திமுக 1 முறையும் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் இங்கு களம் காணுகிறார். இவரை எதிர்த்து திமுகவில் இருந்து மூர்த்தி போட்டியிடுகிறார்.

ராயபுரத்தை மீண்டும் கைப்பற்றுவாரா அமைச்சர் ஜெயக்குமார்? #Royapuram

ஆளப்போவது யார்?

ராயபுரம் தொகுதியை பொறுத்தவரையில் சாலை போக்குவரத்து, பாதாள சாக்கடை போன்றவையே மக்களின் பிரதான பிரச்னையாக இருக்கிறது. இப்பகுதியில் மீனவர்கள் அதிகமாக வசிக்கும் நிலையில், ஆளுங்கட்சி மீனவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்துத் தரவில்லை என்ற குற்றஞ்சாட்டும் எழுந்தது. மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார், எங்களுக்கு ஏதும் செய்யவில்லையென மக்கள் ஆவேசமாக பேசினர்.

ராயபுரத்தை மீண்டும் கைப்பற்றுவாரா அமைச்சர் ஜெயக்குமார்? #Royapuram

சர்வேயின் முடிவில், தொடர்ந்து 5 முறையாக ராயபுரத்தை தன் வசம் வைத்திருக்கும் அதிமுகவுக்கு ஆதரவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பெரும் ஆதரவு இருப்பினும், அதிமுகவை விட திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த தொகுதியில் திமுக – அதிமுக இடையே இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தை கைப்பற்றுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!