அர்ஜெண்டினாவில் ராயல் என்ஃபீல்டு ஆலை- 20 % விற்பனைக்கு இலக்கு

அர்ஜெண்டினாவில் ராயல் என்ஃபீல்டு ஆலை- 20 % விற்பனைக்கு இலக்கு

சென்னை

இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான, ராயல் என்ஃபீல்டு, அர்ஜெண்டினாவில் அசெம்பிளை ஆலையை தொடங்கி உள்ளது.
அந்த நாட்டில் 2018 ஆம் ஆண்டிலிருந்து ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சிம்பா குரூப் நிறுவனத்துடன் இணைந்து அசெம்பிளி ஆலை தொடங்கியுள்ளது.

அர்ஜெண்டினாவில் ராயல் என்ஃபீல்டு ஆலை- 20 % விற்பனைக்கு இலக்கு

இந்தியாவுக்கு வெளியே தற்போது, முதல் முறையாக அர்ஜெண்டினாவில் அசெம்பிளி ஆலை தொடங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விநோத் தாசரி கூறுகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அர்ஜெண்டினாவில் ராயல் என்ஃபீல்டு ஆலை- 20 % விற்பனைக்கு இலக்கு

ஆசிய பசிபிக் நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சந்தையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறினார். தற்போது ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இந்தியாவுக்கு வெளியே 20 சதவீத விற்பனைக்கு இலக்கு வைத்துள்ளதாகவும் விநோத் தாசரி தெரிவித்துள்ளார்.