முகவரி கேட்பதுபோல செல்போன் பறித்த ரவுடி – சிறையில் அடைப்பு !

 

முகவரி கேட்பதுபோல செல்போன் பறித்த ரவுடி – சிறையில் அடைப்பு !

சென்னை

சென்னை,புறநகர் பகுதியில் முகவரி கேட்பதுபோல நடித்து செல்போன் பறித்த ரவுடியை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

சென்னை அயப்பாக்கம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியில் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இதையடுத்து திருமுல்லைவாயல் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருந்தனர்.

முகவரி கேட்பதுபோல செல்போன் பறித்த ரவுடி – சிறையில் அடைப்பு !
வழிப்பறி குற்றவாளி கணேஷ்

இந்த நிலையில், அபகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த இருசக்கர வாகனத்தை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர் அயபாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பதும் தெரிய வந்தது. அவர் அப்பகுதியில் வடமாநில இளைஞர்களிடம் தொடர் வழிப்பறி, செல்போன் பறித்ததும் தெரியவந்தது .

முகவரி கேட்பதுபோல செல்போன் பறித்த ரவுடி – சிறையில் அடைப்பு !

2019ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்மந்தபட்ட குற்றவாளி என்பதையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். சிறைத் தண்டையில் இருந்து வெளி வந்த அவர், வருமானம் இன்றி தவித்ததாகவும், அதனால் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.