• March
    31
    Tuesday

Main Area

Main



காசிமேட்டில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

 சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

சென்னை காசிமேட்டில் வசித்து வருபவர்கள் ரவுடி லோகேஷ் மற்றும் ரவுடி திவாகரன். இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் திவாகரன் லோகேஷின் நண்பர் ஒருவரை முட்டி போட வைத்துள்ளார்.

ttn

இதனால் அவர்களுக்கிடையே பிரச்சனை நடக்கும் என்று உளவுத்துறை போலீசார் அப்பகுதி காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதனை இசக்கி பாண்டியன் பெரிதாக எடுத்துக் கொள்வதா நிலையில் ரவுடி லோகேஷ் உட்பட 6 பேர் திவாகரனை நேற்று  சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். 

ttn

எச்சரிக்கை விடுத்தும் காவலர் இசக்கி பாண்டியன் நடவடிக்கை எடுக்காததால் அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து, திவாகரன் கொலை செய்யப் பட்டது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்ததைக் கண்டுபிடித்து அந்த காட்சிகளைக் கைப்பற்றினர்.

ttn

இந்த கொலையில் ஈடுபட்ட 6 பேரும் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த ரவுடி திவாகரன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.