ரவுடி சங்கர் என்கவுன்டர் : சிபிசிஐடிக்கு பரிந்துரை!

 

ரவுடி சங்கர் என்கவுன்டர் : சிபிசிஐடிக்கு பரிந்துரை!

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் ஆய்வாளர் நடராஜன்.

ரவுடி சங்கர் என்கவுன்டர் : சிபிசிஐடிக்கு பரிந்துரை!

சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக்கிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளன. 5 முறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது தான் என்கவுண்டர் நடந்துள்ளது. 

ரவுடி சங்கர் என்கவுன்டர் : சிபிசிஐடிக்கு பரிந்துரை!

இந்நிலையில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.