கொரோனாவை வென்று போட்டியில் ஆடிய ரொனால்டோ

 

கொரோனாவை வென்று போட்டியில் ஆடிய ரொனால்டோ

உலகம் முழுவதுமே நீக்கமற பரவி வருகிறது கொரோனா. இதனால், உலகின் வழக்கமான செயல்பாடுகளே முடங்கி விட்டன. குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது பெரும் சிரமமாகி விட்டது. அதிலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கக்கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோவுக்கு சென்ற மாதம் 12-ம் தேதியன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

கொரோனாவை வென்று போட்டியில் ஆடிய ரொனால்டோ

அதற்கு முந்தைய மாதத்தில் ஒருநாள், ஆர்வமாக உட்கார்ந்து போட்டியை ரசித்துக்கொண்டிருந்தார் ரொனால்டோ. ஆனால், மாஸ்க் அணிய வில்லை. அதைக் கவனித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி, ரொனால்டோவிடம் மாஸ்க் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். உடனே அதை ஏற்றுக்கொண்டு மாஸ்க் அணிந்துகொண்டார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அதன்பின்பே அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டது.

கொரோனாவை வென்று போட்டியில் ஆடிய ரொனால்டோ

தற்போது கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த ரொனால்டோ, மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு ஒரு போட்டியில் யுவண்டஸ் அணி சார்பாக விளையாடினார். 4:1 என்ற கோல்கள் கணக்கில் யுவண்டஸ் அணி வெற்றிப் பெற்றது. அவற்றில் இரண்டு கோல்கள் அடித்தது ரொனால்டோ. இதன் மூலம் தான் ஆரோக்கியமாகத் திரும்பி வந்துவிட்டேன் என்று உலகிற்குச் சொல்லியிருக்கிறார் ரொனால்டோ.