பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது!

 

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பரிந்துரைக் குழு இன்று வழங்கியுள்ள பரிந்துரை பட்டியலில், கடந்த 2016ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது உள்ளிட்ட உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது!

இதேபோல் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்டோர் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் துறையை பொருத்தவரை இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் கேல் ரத்னா விருதை பெற்றுள்ளனர். பாரா ஒலிம்பிக் வீரர்களைப் பொறுத்தவரை இதற்கு முன்பு தீபா மாலிக் மற்றும் தேவேந்திர ஜாஜ்கரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.