முக கவசம் அணிய வலியுறுத்தும் ரோபோஜப்பான் நிறுவனம் தயாரிப்பு

 

முக கவசம் அணிய வலியுறுத்தும் ரோபோஜப்பான் நிறுவனம் தயாரிப்பு

முக கவசம் அணியாதவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை முக கவசம் அணியுமாறு வலியுறுத்தும் ரோபோவை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

முக கவசம் அணிய வலியுறுத்தும் ரோபோஜப்பான் நிறுவனம் தயாரிப்பு

ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது. பெப்பர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, எதிரே வருவோரின் முகத்தை ஸ்கேன் செய்து, முக கவசம் அணியாவிட்டால் அடையாளம் கண்டுகொள்ளுமாம். பின்னர் அவர்களிடம் ”நீங்கள் முக கவசம் அணியவில்லை. அணிந்துகொள்ளுங்கள்” என்று கூறுமாம். இதனையடுத்து முக கவசம் அணிந்துவிட்டார் என்பதை அடையாளம் கண்டுகொண்டு ” முக கவசம் அணிந்ததற்கு நன்றி” என பதில் கூறுமாம்.

முக கவசம் அணிய வலியுறுத்தும் ரோபோஜப்பான் நிறுவனம் தயாரிப்பு

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோரூம்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் மனிதர்களை வைத்து முக கவசம் அணிய கூறுவதை விட, ரோபோக்களை இந்த பணியில் ஈடுபடுத்துவது சிறப்பு என கருதப்படுகிறது. இதனால், இத்தகைய ரோபோக்களுக்கு மிகப்பெரிய தேவை உள்ளதை மனதில் வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேப்போல, சமூக இடைவெளி கடைபிடிக்காமல், பக்கத்துல வந்து உரசுற பார்ட்டிக்கு ”சூடு” வைக்கிற ரோபோவையும் தயாரிச்சா தேவல !
எஸ்.முத்துக்குமார்