ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் கார் பறிமுதல்!

 

ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் கார் பறிமுதல்!

கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதையடுத்து சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றாலும் மற்ற மாவட்டங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் கார் பறிமுதல்!

இந்நிலையில் முழு ஊரடங்கை மீறி வெளியே சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 20-ம்தேதி அன்று முழு ஊரடங்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங் தனது காரில் பெசன்ட் நகரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்றார். திருவான்மியூர் போக்குவரத்து போலீசார் காரை மடக்கி நிறுத்தி ராபின் சிங்கிடம் விசாரித்தனர். விசாரித்ததில் காய்கறி வாங்க செல்வதாக கூறியுள்ளார். ஆனால் முழு ஊரடங்கை மீறி காரில் சென்றதால் திருவான்மியூர் போக்குவரத்து போலீசார் விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து அபராதமும் விதித்துள்ளனர்.