காங்கிரசின் புதிய தலைவர் யார் என்பது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும்… பிரியங்கா காந்தியின் கணவர் தகவல்

 

காங்கிரசின் புதிய தலைவர் யார் என்பது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும்… பிரியங்கா காந்தியின் கணவர் தகவல்

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அப்போது தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், தங்களது குடும்பத்தை சாராதவர் தலைமையில் தான் செயல்பட தயார் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக யார் வருவார் என்று தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

காங்கிரசின் புதிய தலைவர் யார் என்பது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும்… பிரியங்கா காந்தியின் கணவர் தகவல்

இந்த சூழ்நிலையில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவர் யார் என்பது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும் என தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: அது (தலைவர்) கட்சியின் முடிவு. கட்சி கூட்டாக முடிவெடுக்கும். யாரவாது தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பம் இணைந்து பணியாற்றும். நாட்டுக்காக நாம் ராஜீவ்ஜி மற்றும் சோனியாஜியின் தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறுவோம். கட்சியை மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைவரையும் ஆதரிக்க குடும்பம் எப்போதும் இருக்கும்.

காங்கிரசின் புதிய தலைவர் யார் என்பது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும்… பிரியங்கா காந்தியின் கணவர் தகவல்

எந்த முடிவு எடுத்தாலும், காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும், குடிமக்களுக்கும் தன்னால் முடிந்ததை செய்யும். ராஜீவ் காந்தியை அவரது பிறந்த நாளில் மட்டும் நாம் நினைவில் கொள்ளக்கூடாது, நம்முடைய அன்புடனும் பாசத்துடனும் அவர் நமக்கு கற்பித்தவற்றாலும் அவரை நினைவில் கொள்வோம். நான் பிரியங்கா மற்றும் எனது மாமியாரிமிருந்து அவர் குறித்து கேட்கிறேன். அவரது தொலைநோக்கு பார்வை நாட்டுக்கு சிறந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் மிக சீக்கிரமே காலமாகி விட்டார். அவர் நம்மிடையே இருந்திருந்தால், நாடு இன்னும் மதச்சார்பற்றதாக இருக்கும், தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்திருக்கும். எல்லோரையும் மனதில் வைத்து அவர் எல்லோரையும்-அனைத்து குடிமக்களையும், இளைஞர்களையும் ஒன்றாக இணைத்திருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.