• April
    03
    Friday

Main Area

Main



'ஓடும் ரயிலில் வழிப்பறி': சென்னையில் ஜாலியாக சுற்றித் திரிந்த 4 கொள்ளையர்கள் கைது !

arrested
arrested

கடந்த 20 ஆம் தேதி சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் விரைவு ரயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் சிறிது நேரம் நோட்டமிட்டு, பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்து விட்டுப் பாதி வழியிலேயே இறங்கியுள்ளனர். அவர்கள் முகங்களை மூடியிருந்ததால் பயணிகளால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, காவல் துறையினர் கொள்ளையர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

train

இந்நிலையில், இவர்கள் சென்னை திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்துள்ளனர். இவர்கள் 4 பேரையும் நெடுநேரமாக பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, பயந்து போன கொள்ளையர்கள் ஜெய்ப்பூர் செல்லும் விரைவு ரயிலில் நாங்கள் தான் வழிப்பறி செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். 

statipon

அதனையடுத்து, காவலர்கள் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், வைர மோதிரம், கொள்ளைக்குப் பயன்படுத்தும் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அதன் பின், அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் மீண்டும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நான்கு பெரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.