நெடுஞ்சாலையோர வீடுகளில் லாரியில் வந்து கொள்ளை… 3 பேர் கும்பல் கைது…

 

நெடுஞ்சாலையோர வீடுகளில் லாரியில் வந்து கொள்ளை… 3 பேர் கும்பல் கைது…

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நெடுஞ்சாலையோரம் பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு லாரியில் வந்து கொள்ளையடித்த 3 பேர் கும்பலை போலீசார் கைதுசெய்தனர்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரப்பட்டி அருகே நெடுஞ்சாலையில் பூட்டியிருக்கும் வீட்டை லாரியில் வந்து நோட்டமிட்டு ஒரு கும்பல், கடந்த 16 ஆம் தேதி கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் காவல் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தார்.

நெடுஞ்சாலையோர வீடுகளில் லாரியில் வந்து கொள்ளை… 3 பேர் கும்பல் கைது…

கொள்ளை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்ததில், லாரியில் வந்து கொள்ளையடித்த நபர்கள் ஈரோட்டை சேர்ந்த தாமோதரன் (22) மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரை சேர்ந்த குணசேகரன் (38) மற்றும் கிரி (எ) ரத்தினகிரீஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை ரகசிய தகவலின் பேரில் ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.5 சவரன் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நிலகோட்டை சிறையில் அடைத்தனர்