“நாயை வெட்டி.. பெண்களின் கழுத்தில் கத்தி வைத்து”.. தீரன் பட பாணியில் நடந்த கொள்ளை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல தளர்வுகளை அளித்துள்ளது. அதனால் ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரை இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது நாளொன்றுக்கு 2000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் முடிந்த வரை பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே இந்த ஊரடங்கில் பல கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாளையம் அருகே தீரன் பட பாணியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் வாயி்ற்கதவை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு குரைத்துக் கொண்டிருந்த நாயை அறிவாளால் வெட்டி விட்டு, வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Most Popular

ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

நாட்டின் முன்னணி இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 2.52 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜூனுடன் ஒப்பிட்டால்...

ராமர் கோயில் பூமி பூஜை.. என் பெயரை நீக்குங்க.. பிரதமர் மோடி சென்ற பிறகுதான் வருவேன்.. உமா பாரதி தகவல்

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தர...

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...