பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் அடித்ததால் அலறி போன திருடன்!

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் அடித்ததால் அலறி போன திருடன்!

கொரோனா பாதிப்பால் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடுமாறு அரசு உத்தரவிட்டது. அதன் படி மால்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வங்கிகளும் கூட மூடப்பட்டன. ஆனால் மக்கள் வங்கிகள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டதாலும் பண பரிவர்த்தனை முடங்கியதாலும் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அனைத்து வங்கிகலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பால் குற்றங்களும் கொள்ளை சம்பவங்களும் பெருமளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் அடித்ததால் அலறி போன திருடன்!

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கி வருகிறது. அந்த வங்கியில் நேற்று இரவு பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற திருடன், லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளான். அப்போது லாக்கரில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடிக்க தொடங்கியுள்ளது. அதனால் மிரண்டு போன திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில், அந்த நபர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.