ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

 

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29) என்பவர் செல்போன் வியாபாரம் செய்கிறார். அதோடு, பழைய நகைகளை வாங்கியும் விற்பனையும் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி மதியம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்றில் ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை செலுத்த சென்றுள்ளார் அமீது. அப்போது, ஏ.டி.எம். மையம் அருகில் பைக்கில் நின்ற கொள்ளையர்கள் 3 பேர், சாகுல் அமீதை திடீரென தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

சாகுல் அமீதும் விடாமல் கொள்ளையர்களை விரட்டி சென்றார். இதைப்பார்த்த பொதுமக்களும் கொள்ளையர்களை விரட்டினார்கள். அப்போது, பணத்தை வைத்திருந்த கொள்ளையர்களின் ஒருவன் பொதுமக்களிடம் சிக்கினான். அவனை நைய புடைத்த பொதுமக்கள், ராயப்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவனிடம் இருந்த ரூ.15 லட்சத்தை காவல்துறையினர் மீட்டனர். கைதான கொள்ளையின் பெயர் விக்னேஷ்வரன் (23) என்றும் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தப்பியோடி 2 கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

சினிமாவை விஞ்சும் அளவில் பட்டப்பகலில் கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.