சாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

 

சாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

திருவள்ளூர்

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர், நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று திருவள்ளூ்ர் நகரின் மையப் பகுதியில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீதி நடாகம் நடைபெற்றது. இதில் நாடக கலைஞர்கள் ஹெல்மட் மற்றும் கார் சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக நாடங்களை நடித்துக்காட்டினார்.

சாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

தொடர்ந்து, எம தர்மன் மற்றும் சித்திர குப்தன் வேடம் அணிந்த கலைஞர்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகளின் மீது பாச கயிற்றினை வீசி, அவற்றின் அவசியத்தை எடுத்துக் கூறினர். மேலும், ஹெல்மட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏராளமான வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.