திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடக கலைஞர்கள்!

 

திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடக கலைஞர்கள்!

திண்டுக்கல்

திண்டுக்கலில் ஹெல்மட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக காவல்துறை சார்பில் மேடை நாடகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக, பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மேடை நாடகம் நடத்தப்பட்டது.

திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடக கலைஞர்கள்!

இதில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்துகொண்டு, விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும் வலியுறுத்தி நாடக நடிகர்கள் தத்ரூபாக நடித்துக்காட்டி அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன், திண்டுக்கல் நகர் உட்கோட்ட டிஎஸ்பி மணிமாறன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.