விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்.. பா.ஜ.க.வை மிரட்டும் ஆர்.எல்.பி.

விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்.. பா.ஜ.க.வை மிரட்டும் ஆர்.எல்.பி.

விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று பா.ஜ.க.வை அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி.) மிரட்டல் விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து வெளியேறியது.

விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்.. பா.ஜ.க.வை மிரட்டும் ஆர்.எல்.பி.
ஹனுமான் பெனிவால்

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியின் தலைவரும், நாக்பூர் எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர், நான் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தேன். கருப்பு சட்டங்கள் நீக்கப்படவில்லையென்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எங்களது ஆதரவை தொடர்வது குறித்து சிந்திப்போம் என்று அமித் ஷாஜிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பேசியுள்ளார்.

விவசாய சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்.. பா.ஜ.க.வை மிரட்டும் ஆர்.எல்.பி.
அமித் ஷா

ஹனுமான் பெனிவால், அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், நாட்டில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை கருத்தில் கொண்டு உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். சுவாமிநாதன் கமிஷனின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும். விவசாயிகளும், இளைஞர்களும்தான் ஆர்.எல்.பி.யின் சக்தி. சீக்கிரமாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லையென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கப்படுவேன் என்று தெரிவித்து இருந்தார்.