கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறைக்கு ரூ. 500 கோடி இழப்பு: ஆர்கே செல்வமணி

- Advertisement -

சின்னத்திரை படப்பிடிப்புகள் 60 பேரை கொண்டு நடத்தலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு செங்கல்பட்டு பையனுரில் முதல்கட்டமாக 1000 குடியிருப்பு கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

- Advertisement -

- Advertisement -

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, “முதற்கட்டமாக ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றி. ஊரடங்கால் ஒட்டுமொத்தமாக சினிமா தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்த சில பிரச்னைகள் உண்டு. மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டியதால் தாமதம் ஏற்படுகிறது. வெளிமாநில நடிகர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருந்தால் இங்கு வந்ததும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். மருத்துவக் காப்பீடு அவசியம் என வலியுறுத்தியிருக்கிறோம். சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கினாலும் அதை நடத்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வெளிப்புற படப்பிடிப்பு நடந்தால் அதிகப்படியான கூட்டம் சேர வாய்ப்புள்ளதால் யோசித்து முடிவெடுக்கலாம் என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஜூன் 10ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கும். கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறைக்கு ரூ. 500 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது” எனக்கூறினார்.

- Advertisment -

Most Popular

தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை கட்டண குறைப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற...

10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞரை கொலை செய்த தந்தை

சிதம்பரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை காதல் செய்யகோரி வீட்டிற்கே வந்து தொல்லை கொடுத்த வாலிபர் கை கால் கட்டப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(21). இவர்...

2ஆவதும் பெண் குழந்தை! வருத்தத்தில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர்...

13 மணி நேரம் பிரசவ வலியுடன் அலைந்தும் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கர்ப்பிணி உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இதுவரை யை25,004 பேருக்கு கொரோனாதொற்று பாதிப்பு...