கொரோனா அச்சம்… தொகுதி பக்கமே தலைகாட்டாத டிடிவி… மகளின் கல்யாண வேலையில் பிசி!- கொந்தளிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்

 

கொரோனா அச்சம்… தொகுதி பக்கமே தலைகாட்டாத டிடிவி… மகளின் கல்யாண வேலையில் பிசி!- கொந்தளிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் இதுவரை வரவில்லை. இதனால் தொகுதி மக்கள், எம்எல்ஏ மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

கொரோனா இந்தியாவை மட்டுமின்றி தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டு விட்டது என்றே சொல்லலாம். பலர் வேலை இழந்தும், பொருளாதாரத்தை இழந்து தவிர்த்து வருகின்றனர். பல குடும்பங்கள் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாக மக்களின் தவிப்பை சொல்லிமாலாது. குறிப்பாக சென்னை மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 15 மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ராயுபரம் மண்டலத்துக்கு உட்பட ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், தங்கள் எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் வருகைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அவர் இதுவரை தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை. அவரரோ, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்து மகளின் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். இது ஆர்.கே.நகர் பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை விட 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்து டிடிவியை வெற்றிபெற வைத்தனர் அந்த தொகுதி மக்கள்.

கொரோனா அச்சம்… தொகுதி பக்கமே தலைகாட்டாத டிடிவி… மகளின் கல்யாண வேலையில் பிசி!- கொந்தளிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்

ஆரோவில்லிலேயே இருக்கும் தினகரன் ஆர்.கே.நகருக்கு ஏன் வரவில்லை? என்பது குறித்து அமமுகவின் சீனியர் நிர்வாகிகள் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஏப்ரல் மாதத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்தபோது தமிழக அரசு சார்பில் எதிர்க்கட்சிகள் உதவுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டது. இந்த சர்ச்சையின் போது ஏப்ரல் 13 ஆம் தேதி டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை கவனிக்கத் தக்கது.

’இந்த இக்கட்டான நேரத்தில் தனிமனித விலகல் மிக முக்கியமானது என்பதால் கூட்டம் சேருவதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைத்தான் செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கியபோது எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால், ஊரடங்கை மீறி கட்சித் தலைவர்களே நேரடியாக சென்று உதவிகள் வழங்கும் போது விதிகளுக்கு புறம்பாக தொண்டர்களும் அங்கே கூடுவதால் தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் தினகரன். ஆக இதன் மூலம் களத்தில் தலைவர்கள் இறங்கத் தேவையில்லை என்பதை அவர் ஏப்ரல் 13 ஆம் தேதியே தெரிவித்துவிட்டார். தான் எங்கும் வரமாட்டேன் என்றும் நிர்வாகிகளும் பாதுகாப்பாக இருந்து நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அப்போதே உத்தரவிட்டிருந்தார் தினகரன்.

கொரோனா அச்சம்… தொகுதி பக்கமே தலைகாட்டாத டிடிவி… மகளின் கல்யாண வேலையில் பிசி!- கொந்தளிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்

இது மற்ற பகுதிகளுக்கு பொருந்தினாலும் தினகரன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆர்.கே.நகர் நிலை வேறாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அமமுக சார்பில் ஆங்காங்கே நிவாரணப் பொருட்களைக் கொடுத்தாலும் சட்டமன்ற உறுப்பினரான தினகரன் வந்தால் அது இன்னும் நன்றாக இருக்கும் என்று, அமமுக தலைமை நிர்வாகிகள் சிலர் ஆரோவில்லில் இருக்கும் தினகரனுக்கு தகவல் அனுப்பினார்கள். தகவல் மட்டுமல்ல ஒரு திட்டத்தையும் தயாரித்து அனுப்பினார்கள்.

தொகுதியில் ஏறத்தாழ 90 ஆயிரம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. ஒரு கார்டுக்கு 2 ஆயிரம் வீதம் பொருட்கள் கொடுத்தால் 18 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கு போட்டு தினகரன் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்கள். முதலில் இதை ஆர்வமோடு விசாரித்த தினகரன் இதுகுறித்து தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆலோசித்தார். அப்போது, ‘அண்ணே… அமமுக சார்பா ஆங்காங்கே நம்மால முடிஞ்சதைக் கொடுத்துகிட்டிருக்கோம்.

கொரோனா அச்சம்… தொகுதி பக்கமே தலைகாட்டாத டிடிவி… மகளின் கல்யாண வேலையில் பிசி!- கொந்தளிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்

இப்ப 18 கோடி ரூபாய் செலவு பண்ணி, அதை விநியோகிக்க சில லட்சங்கள் செலவு பண்ணி நாம நிகழ்ச்சிகள் நடத்தினா, அதுவும் நீங்க நேரா வந்தீங்கன்னா நிச்சயம் ஆளுங்கட்சி இடைஞ்சல் கொடுக்கும். நம்மை முழுசா கொடுக்க விட மாட்டாங்க. சர்ச்சையாக்கி உங்க மேல வழக்கு போடதான் பார்ப்பாங்க. அதனால இப்ப அலட்டிக்க வேணாம். தேர்தல் நேரத்துல நாம கொடுக்கப் போறதோட சேர்த்து இதையும் கொடுத்துடலாம்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்துதான் தினகரன் இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டார்” என்கிறார்கள்.

ஆனால் ஆர்.கே.நகர் மக்களோ, ‘தினகரனைப் பார்த்தால் ஆர்.கே.நகர் என்ற தொகுதியில் அவர் ஜெயித்தார் என்பதை அவருக்கு நினைவுபடுத்துங்கள். நாங்கள் அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறோம். தொகுதிக்கு நல்லது செய்வார் என்றுதான் நாங்கள் அவரை வெற்றி பெற வைத்தோம். ஆனால், எங்களை இதுவரை வந்து பார்க்கவில்லை” என்று ஆவேசத்துடன் கூறினர்.