போர் களமான பீகார் சட்டப்பேரவை.. ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வரப்பட்ட லாலு கட்சி எம்.எல்.ஏ.

போர் களமான பீகார் சட்டப்பேரவை.. ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வரப்பட்ட லாலு கட்சி எம்.எல்.ஏ.

பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறலில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை போர்க்களம் போல் காட்சியளித்தது. காவலர்கள் உள்ளே வந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வெளியே கொண்டு வந்தனர்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சிறப்பு ஆயுத போலீஸ் 2021 மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், சபாநாயகரை பிணையாக வைத்திருக்கும் நோக்கில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவரது நாற்காலியை சுற்றி நின்றனர்.

போர் களமான பீகார் சட்டப்பேரவை.. ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வரப்பட்ட லாலு கட்சி எம்.எல்.ஏ.
பாதுகாவலர்களால் வெளியே இழுத்து வரப்பட்ட எம்.எல்.ஏ.

இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற மார்ஷல்களுக்கு உதவ பீகார் சட்டப்பேரவைக்குள் போலீசார் அழைக்கப்பட்டனர். உள்ளே வந்த போலீசார் பல ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினர். சட்டப்பேரவையிலிருந்து ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.சதீஷ் குமாரை போலீசார் ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வந்தனர்.

போர் களமான பீகார் சட்டப்பேரவை.. ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வரப்பட்ட லாலு கட்சி எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றிம்

இது குறித்து எம்.எல்.ஏ. சதீஷ் குமார் கூறுகையில், சட்டப்பேரவைக்குள் சிறப்பு ஆயுத காவல் மசோதாவுக்கு (2021) எதிர்ப்பு தெரிவித்தபோது போலீஸ் மற்றும் லோக்கல் குண்டர்களால் கையாளப்பட்டேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இன்று எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார். இதற்கிடையே எதிர்கட்சி பெண் எம்.எல்.ஏ.க்கள் பெண் பாதுகாப்பு அதிகாரிகளால் பத்திரமாக சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.