பீகாரில் கட்சி தாவ தயாராக இருக்கும் நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள்… ஆபத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி?

பீகாரில் கட்சி தாவ தயாராக இருக்கும் நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள்… ஆபத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி?

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மொத்தம் 125 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. பா.ஜ.க. 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களே வென்ற போதிலும் தேர்தல் சமயத்தில் கூறியபடி நிதிஷ் குமாரை பா.ஜ.க. முதல்வராக்கியது.

பீகாரில் கட்சி தாவ தயாராக இருக்கும் நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள்… ஆபத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி?
பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம்

இந்த சூழ்நிலையில் அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பா.ஜ.க.வுக்கு தாவினர். இதனால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. அருணாசல பிரதேசத்தை போன்று பீகாரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்களில் சிலர் கட்சி தாவும் நினைப்பில் உள்ளனர். அவர்கள் கட்சி மாறப்போவது பா.ஜ.க.வுக்கு அல்ல எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு.

பீகாரில் கட்சி தாவ தயாராக இருக்கும் நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள்… ஆபத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி?
தேஜஸ்வி யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷ்யாம் ராஜக் இது தொடர்பாக கூறுகையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் 17 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போதைய ஆட்சியில் திணறுகிறார்கள். ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க.வுக்கு முன் முதல்வர் (நிதிஷ் குமார்) சரணடைந்ததாக தெரிகிறது. அவர்கள் விரைவில் கட்சி மாற தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற போவதாக வெளியாகி உள்ள செய்தியால் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம் தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.