மெகா கூட்டணியில் வெடித்தது மோதல்… தேர்தல் நேரத்தில் சுற்றுலா சென்ற ராகுல் காந்தி… ஆர்.ஜே.டி. குற்றச்சாட்டு

மெகா கூட்டணியில் வெடித்தது மோதல்… தேர்தல் நேரத்தில் சுற்றுலா சென்ற ராகுல் காந்தி… ஆர்.ஜே.டி. குற்றச்சாட்டு

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் முழு வீச்சில் இருக்கும்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காமல் சிம்லாவில் ராகுல் காந்தி சுற்றுலாவில் இருந்தார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவானந்த் திவாரி கூறியதாவது: காங்கிரஸ் கட்சி பீகாரில் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் 70 பொது கூட்டங்களை நடத்தவில்லை. ராகுல் காந்தி இங்கு 3 நாட்கள் வந்தார், ஒரு நாளைக்கு 2 கூட்டங்களை மட்டுமே நடத்தினார். அதேசமயம் ராகுல் காந்தியை காட்டிலும் 10 முதல் 15 வயது பெரியவரான பிரதமர் நரேந்திர மோடி தினமும் 3 முதல் 4 கூட்டங்களில் பங்கேற்றார். என்ன இது.. பிரியங்கா காந்தி இங்கு வரவே இல்லை.

மெகா கூட்டணியில் வெடித்தது மோதல்… தேர்தல் நேரத்தில் சுற்றுலா சென்ற ராகுல் காந்தி… ஆர்.ஜே.டி. குற்றச்சாட்டு
சிவானந்த் திவாரி

தேர்தல்கள் முழு வீச்சில் இருந்தன, அந்த நேரத்தில் சிம்லாவில் பிரியங்கா ஜி இடத்தில் ராகுல் காந்தி ஒரு சுற்றுலாவுக்கு சென்று இருந்தார். கட்சி அப்படிதான் நடக்கிறதா?. காங்கிரஸ் நடக்கும் விதத்தில் அதன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம், இது பா.ஜ.க.வுக்கு பயன் அளிக்கிறது.

மெகா கூட்டணியில் வெடித்தது மோதல்… தேர்தல் நேரத்தில் சுற்றுலா சென்ற ராகுல் காந்தி… ஆர்.ஜே.டி. குற்றச்சாட்டு
காங்கிரஸ்

மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் கைவிலங்காக மாறி விட்டது. இது பீகாரில் மட்டும் இல்லை என்று நான் நினைக்கிறேன். மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் அதிகபட்ச இடங்களில் போட்டியிடுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அது அதிகபட்ட இடங்களை வெல்வதில் தோல்வி அடைகிறது. காங்கிரஸ் இதை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.