Home தமிழகம் "தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" : நடிகை ரித்விகா கொடுத்த பதிலடி!

“தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” : நடிகை ரித்விகா கொடுத்த பதிலடி!

நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..என்று ஆவேசமாக பதிலளித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை  ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ரித்விகா வின்னராக மாறியதற்கு முக்கிய காரணம், பிக் பாஸ் வீட்டில் நடந்த சில தவறுகளை தட்டிக் கேட்டும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் தனது கருத்துக்களை நேரடியாகப் பேசியும் மக்களை கவர்ந்தார். பிக் பாஸ் போட்டியில் ஒருவரை பற்றி புறம்பேசாத போட்டியாளராக கடைசி வரை தொடர்ந்த ரித்விகா நேர்மையான போட்டியாளராகவும் பார்க்கப்பட்டார்.

rithu

ஆனால் ரித்விகா வெற்றி பெற்றதற்கு சில எதிர்மறையான கருத்துக்களும் முன் வைக்கப்பட்டது. தமிழ் பெண் தான் வெற்றிபெற வேண்டும் என்று பரவலாக கருத்து நிலவியதைத் தொடர்ந்து ரித்விகா தேர்வு செய்யப்பட்டதாகவும், சாதியின் அடிப்படையில் தான் ரித்விகா தேர்வானார் என்றும் சிலர் கூறி வந்தனர். இதற்கு அவர் நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..என்று ஆவேசமாக பதிலளித்தார்.

rithvika

இந்நிலையில் நடிகை ரித்விகா தனது டிவிட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் நெட்டிசன் ஒருவர், பருவத்துல பன்னிக்குட்டி கூட அழகாக தான் இருக்கும் எஸ்சி கேர்ள்ஸ் என்று மோசமாக குறிப்பிட்டு இருந்தார்.


இதற்கு நடிகை ரித்விகா பதிலடி கொடுக்கும் விதமாக, ” தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய பாக்கியம் நானடையேன்… நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகள் அற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித் ஆகிய பிழையும் பாவமும் தங்கள் ஆண் இனத்தையே சாரும். மற்றபடி என் அழகை பாராட்டியதற்கு நன்றி.
பின்குறிப்பு தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular

ஆம்னி பேருந்துகள் எப்போது ஓடும்? அரசிடம் பேருந்துகளை ஒப்படைக்க முடிவு? : ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப்...

ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யவில்லை! உபி போலீசார் பகீர் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...

”தென்கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயனத்துக்கு கூடுதல் வரி?”

தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன பொருள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலீக்குநீரிலி (phthalic anhydride)எனப்படும்...

போலீஸ் துரத்தியபோது ஆற்றில் விழுந்து மீனவர் இறந்த சம்பவம்: தாழங்குடாவில் தொடரும் பதற்றம் -போலீஸ் குவிப்பு

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!