மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டு மறுவாழ்வைத் தொடரும் ரிவால்டோ யானை

மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டு மறுவாழ்வைத் தொடரும் ரிவால்டோ யானை

மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரிவால்டோ யானையை தமிழ்நாடு வனத்துறை மீண்டும் வனத்திற்குள் விட்டுள்ளது.

மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டு மறுவாழ்வைத் தொடரும் ரிவால்டோ யானை

ரிவால்டோ என்ற 35 வயது மதிக்கத்தக்க யானை மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் பொது மக்களின் அச்சத்தினால் கடந்த மே மாதம் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தெப்பக்காட்டில் ஒரு மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட யானையினை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி மறுவாழ்வு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் யானை காட்டுக்குள் விடப்பட்டுள்ளது.

மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டு மறுவாழ்வைத் தொடரும் ரிவால்டோ யானை

இந்நிலையில் தமிழ்நாட்டில் பிடிபட்ட காட்டு யானையை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி மறுவாழ்வு அளிப்பது இதுவே முதல் முறையாகும் என வனத்துறை தெரிவித்துள்ளது. யானையின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக ரேடியோ கழுத்துப்பட்டை அதற்கு அணிவிக்கப்பட்டுள்ளது. மனித நடவடிக்கைகளால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வனவிலங்குகள் அதன் இயற்கைச் சூழலில் மிக பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சிறப்பான முன்னுதாரணமாக இந்த நடவடிக்கை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.