அதிகரித்துவரும் இணைய மருத்துவத்தால் ஆபத்து!

 

அதிகரித்துவரும் இணைய மருத்துவத்தால் ஆபத்து!

இணைய மருத்துவம்… இன்றைக்கு இணையத்தைத் தட்டினால் எல்லாம் கிடைக்கிறது. இணையத்தைப் பார்த்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். பலநேரங்களில் நல்லவற்றைச் சொல்லும் இணையத்தை நம்பி விபரீதத்தில் முடிந்த சம்பவங்கள் அண்மையில் அரங்கேறியதைப் பார்த்திருப்போம்.

அதிகரித்துவரும் இணைய மருத்துவத்தால் ஆபத்து!தலைவலி:
வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் ஒருவருக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவலகப் பணி. 8 மணி நேரமும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் இருக்கவேண்டிய கட்டாயம். கணினியில் வேலை பார்ப்பதால் அவர் தனது அனைத்து தேவைகளையும் அதன்மூலம் பெறுவது வாடிக்கை.

தனக்கு வந்த தலைவலிக்கு என்ன மருந்து சாப்பிட்டால் பிரச்சினை தீரும் என்று இணையத்தை நாடியிருக்கிறார். அதில் சொல்லப்பட்ட மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டதில் தீர்வு கிடைத்தது. ஆனால், சுய மருத்துவம் என்பதால் அவருக்கு வந்த தலைவலி எந்தவகை தலைவலி என்பதை அவர் அறியவில்லை.

குளிர்ந்த நீரில் குளிப்பது, குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பது போன்றவற்றால் அவருக்கு வந்த பிரச்சினையைப் பற்றி எந்த மருத்துவரிடமும் அவர் கலந்தாலோசிக்கவில்லை. விளைவு இன்றைக்கு என்னவென்று கண்டுபிடிக்கமுடியாத ஒரு நலக்குறைவு.

அதிகரித்துவரும் இணைய மருத்துவத்தால் ஆபத்து!
கல்லீரல் பாதிப்பு:
இவரைப்போலவே, பகல் முழுக்க பைக்கில் சுற்றும் இன்னொருவருக்கு விற்பனைப் பிரதிநிதி வேலை. இவருக்கும் தலைவலி வர, இணையவழி படிப்பில் தேர்ச்சி பெற்ற இவரும் தனது பிரச்சினைக்கு இணையத்திலேயே மருந்து தேடி அதைச் சாப்பிட்டிருக்கிறார். இவருக்கும் தலைவலி தீர்ந்திருக்கிறது. ஆனால், அவர் சாப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளால் கல்லீரல் செயலிழந்துவிட்டது.

இணையத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கிறது. அந்த அளவுக்கு எல்லாவற்றையும் கொட்டி வைத்திருக்கிறார்கள். இணையத்தில் உள்ள தகவல்களை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், மருத்துவம் என்பது வேறு. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் ஆபத்தில் தள்ளிவிடும் என்பதற்கு இந்த இரண்டுபேரின் கேஸ் ஹிஸ்டரி போதுமென்று நினைக்கிறேன்.

படித்த பலரிடம் இருக்கும் பிரச்சினையே இதுதான். பலநேரங்களில் உதவிகரமாக இருக்கும் இணையத்தை முழுமையாக நம்பி தங்களுக்கு வரும் உடல்நலப் பிரச்சினைகளை இதுதான் என்று முடிவு செய்கிறார்கள். அதேபோல் சில மருந்துகளில் சேர்க்கப்பட்டிருக்கும் உட்பொருள்கள் தங்களைக் காக்கும் என்று நம்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

அதிகரித்துவரும் இணைய மருத்துவத்தால் ஆபத்து!
சித்தாந்தம்:
மருந்துகளைப் பொறுத்தவரை கூர்மையான கத்தி அல்லது அரிவாள்மனை போன்றது. ஆடுவெட்டும் கத்தியை அந்தப் பணியாளரால்தான் லாகவமாகக் கையாள முடியும். அதேபோல் மீன்வெட்டும் பெண்ணுக்கும் இல்லத்தரசிகளுக்கும் மட்டுமே அரிவாள்மனையை கையாளத் தெரியும். வீரம் செறிந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் முரட்டு ஆணிடம் அரிவாள்மனையில் காய்கறி வெட்டச் சொன்னால் அவன் கைவிரல்களை வெட்டிக் கொள்வான் என்பதே உண்மை.

இந்த சித்தாந்தம் மருந்துகளுக்கும் பொருந்தும். விவரம் தெரியாமல் மருந்துகளை எடுத்துக்கொண்டால் அது ஏற்படுத்தும் விளைவு விபரீதமாகவே இருக்கும். எனவே, இனிமேலாவது இணையத்தை நம்பி மருத்துவம் செய்யாமலிருப்போம்.