• March
    30
    Monday

Main Area

Main



விரத நாட்களிலும் கூட உயர்ந்து வரும் மீன்கள் விலை.. காரணம் இது தானாம் : தற்போதைய மீன் சந்தை நிலவரம் !

மீன் சந்தை
மீன் சந்தை


அசைவ உணவுகளில் மக்களால் பெரிதும் விரும்பப்படுவது கடல் உணவுகள் தான். அவைகளில் பெரும்பாலும் மீன் வகைகளையே மக்கள் வாங்குவர். அதனால் எப்போதுமே சென்னையில் உள்ள  வானகரம், காசிமேடு, எண்ணூர்,  ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சந்தைகளில் கூட்டம் களைக்கட்டும். ஆனால், விரத நாட்களின் போது கூட்டம் குறைவாகவே இருக்கும். அந்த சமயத்தில் மீன்களின் விலையும் சற்று மலிவாக இருக்கும். 

ttn

கார்த்திகை மாதம் மீன்களின் விலை குறைந்திருந்த நிலையில் விரதங்கள் முடிந்த பிறகு கடந்த வாரம் மீண்டும் விலை உயர்ந்தது. இப்போது மீண்டும் விரத காலங்கள் ஆரம்பிப்பதால் மீன்களின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.50 வரை குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அமாவாசை, வரும் ஞாயிற்றுக் கிழமை  கார்த்திகை விரதம், அதுமட்டுமில்லாமல் இன்று முதல் கிறித்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியிருக்கிறது. இதனால் மீன் விலை குறைந்துள்ளது. இப்போது குறைந்திருந்தாலும் ம் மீன் வரத்து குறைத்திருப்பதால் வரும் நாட்களில் மீன் விலை உயரும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

tth

வானகரம் மீன் சந்தையில் விற்கப்படும் மீன்விலைகளின் பட்டியலைப் பார்ப்போம். 
 
ஒரு கிலோ சங்கரா மீன்  ரூ.100 முதல் 180 வரையிலும், சீலா மீன் ரூ.100 முதல் 240 வரையிலும், வஞ்சிரம் மீன் ரூ.300 முதல் 500 வரையிலும், வவ்வால் மீன் ரூ.380 வரையிலும், நகரை மீன் ரூ.80 முதல் 100 வரையிலும் விற்கப்படுகிறது. நெத்திலி மீன் ரூ.70 முதல் 130 வரையிலும், மத்தி, கவளை, கடமான் உள்ளிட்டவை ரூ.80 முதல் 100 வரையிலும், கிழங்கான் மீன்  - ரூ.80 முதல் 100 வரையிலும் விற்கப்படுகிறது. மேலும் நண்டு ரூ.120 முதல் 240 வரையிலும் இறால் ரூ.150 முதல் 300 வரையிலும், சுறா மீன் ரூ.120க்கும், வளர்ப்பு மீன்களான கட்லா, ஏரி வவ்வால் ரூ.100 முதல் 120 வரையிலும் விற்கப்படுகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.