குறையும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை… உயரும் குணமடைந்தோர் விகிதம் – ஆறுதல் அளிக்கும் கொரோனா ரிப்போர்ட்!

குறையும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை… உயரும் குணமடைந்தோர் விகிதம் – ஆறுதல் அளிக்கும் கொரோனா ரிப்போர்ட்!

கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்தது. ஆகஸ்ட் மாதம் உச்சம் பெற்ற கொரோனா பரவல் டிசம்பர் மாதத்திலிருந்தே குறைய தொடங்கியது. அதற்குப் பிறகே தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரவலிலேயே மக்கள் பலரைக் கொன்றுகுவித்தது. கடந்த மாதத்திலிருந்து இரண்டாம் அலை பரவல் சிம்மசொப்பனமாகியிருக்கிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை மிக கொடூரமாக தாக்கி வருகிறது.

குறையும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை… உயரும் குணமடைந்தோர் விகிதம் – ஆறுதல் அளிக்கும் கொரோனா ரிப்போர்ட்!

தினமும் ஆக்சிஜனுக்காகவும் மருந்துகளுக்காகவும் மக்களின் அவலக் குரல் காதைக் கிழிக்கிறது. மருந்துகளுக்காக மக்கள் வரிசையில் நிற்க, மயானங்களில் பிணங்கள் வரிசையில் நிற்கின்றன. அந்தளவிற்கு கொரோனாவின் கோரத்தாண்டவம் நாட்டு மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் கூடுதல் ஆறுதல் தருகிறது.

குறையும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை… உயரும் குணமடைந்தோர் விகிதம் – ஆறுதல் அளிக்கும் கொரோனா ரிப்போர்ட்!

இந்தியாவின் ஒட்டுமொத்த புள்ளிவிவரம் (15.05.2021 வரை)

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898

சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை – 36 லட்சத்து 73 ஆயிரத்து 802

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 2 லட்சத்து 66 ஆயிரத்து 207

குணமடைந்தோர் விகிதம் – 83.83%

இறப்பு விகிதம் – 1.09%

சிகிச்சை பெறுவோர் விகிதம் – 15.07%

குறையும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை… உயரும் குணமடைந்தோர் விகிதம் – ஆறுதல் அளிக்கும் கொரோனா ரிப்போர்ட்!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த புள்ளிவிவரம் (14.05.2021 வரை)

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 15 லட்சத்து 31 ஆயிரத்து 377

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 13 லட்சத்து 18 ஆயிரத்து 982

சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை – 1 லட்சத்து 95 ஆயிரத்து 339

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 17 ஆயிரத்து 56

குணமடைந்தோர் விகிதம் – 86.13%

இறப்பு விகிதம் – 1.11%

சிகிச்சை பெறுவோர் விகிதம் – 12.75%

Image

சென்னையின் ஒட்டுமொத்த புள்ளிவிவரம் (15.05.2021 வரை)

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 4 லட்சத்து 25 ஆயிரத்து 603

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 3 லட்சத்து 75 ஆயிரத்து 669

சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை – 44 ஆயிரத்து 313

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 5 ஆயிரத்து 621

குறையும் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை… உயரும் குணமடைந்தோர் விகிதம் – ஆறுதல் அளிக்கும் கொரோனா ரிப்போர்ட்!

குணமடைந்தோர் விகிதம் – 88.26%

இறப்பு விகிதம் – 1.32%

சிகிச்சை பெறுவோர் விகிதம் – 10.41%