அதிகரிக்கும் கொரோனா : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு!

 

அதிகரிக்கும் கொரோனா : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு!

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இன்று முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. தினசரி பாதிப்பே சுமார் 30 ஆயிரத்தை தொடுவது அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு!

இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் , இந்தியாவில் கேரளாவில்தான்கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எண்ணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது . இதனால் தேவையின்றி வாகனங்கள் மூலம் சுற்றி திரியவோ, பொது மக்கள் வெளியில் நடமாடவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர முழு ஊரடங்கு நாளை இரவு முதல் அமல்படுத்த கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.