• March
    31
    Tuesday

Main Area

Main



நடிகர் சேது மரணம்: சந்தானம் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!

சேதுராமன்
சேதுராமன்

 

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 37. 

2013-ம் ஆண்டு நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் காமெடி திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இதில் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.  
இதையடுத்து   தமிழில் வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ttn

இந்நிலையில் சென்னையில் வசிக்கும் சேதுராமனுக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. தோல் மருத்துவத்தில் நிபுணரான இவர், Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.  இவருக்குக் கடந்த 2016-ம் ஆண்டு உமையாள்  என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குப் பெண் குழந்தை உள்ளது
 என்பது குறிப்பிடத்தக்கது.

ttn

இளம் வயதில் சேதுராமன் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

நடிகர் சந்தானம் 

நடிகர் விஷ்ணு விஷால் 

நடிகர் சதீஷ் 

நடிகை குஷ்பூ 

நடிகை விஜே ரம்யா 

நடிகை அதுல்யா ரவி 

2018 TopTamilNews. All rights reserved.