வாணியம்பாடியில் கலவர தடுப்பு ஒத்திகை… தத்ரூபமாக செய்துகாட்டி அசத்திய காவலர்கள்….

வாணியம்பாடியில் கலவர தடுப்பு ஒத்திகை… தத்ரூபமாக செய்துகாட்டி அசத்திய காவலர்கள்….

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் இன்று நடந்த கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், போலீசார் கலவர தடுப்பு நடவடிக்கைகளை தத்ரூபமாக செய்து காட்டி அசத்தினர்.

வாணியம்பாடியில் கலவர தடுப்பு ஒத்திகை… தத்ரூபமாக செய்துகாட்டி அசத்திய காவலர்கள்….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று மாவட்ட காவல் துறை சார்பில் கலவர ஒத்திகை தடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடந்த இந்த ஒத்திகையில், 100-க்கும் மேற்பட்ட காவலர்கள், ஊர்க்காவல்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர். இந்த ஒத்திகையில் கலவரம் ஏற்படும்போது சட்ட விதிகளை பின்பற்றி ஒவ்வொரு நிலைகளாக காவல்துறையினர் எதிர்கொள்ளும் முறை குறித்து காட்சிபடுத்தப்பட்டது.

வாணியம்பாடியில் கலவர தடுப்பு ஒத்திகை… தத்ரூபமாக செய்துகாட்டி அசத்திய காவலர்கள்….

இதனையொட்டி, கலவரக்காரர்கள் வேடமிட்டு வந்த காவலர்களை, முதற்கட்டமாக தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தும், அதனை மீறி வருவோர் மீது தடியடி நடத்துதல், மூன்றாம் நிலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தல் போன்றும் செய்துக்காட்டினர். மேலும், கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியாதபோது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டிய போலீசார், போலீசாரை தாக்கி பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு தூக்கிச்செல்வது என செய்து காண்பித்தனர்.

வாணியம்பாடியில் கலவர தடுப்பு ஒத்திகை… தத்ரூபமாக செய்துகாட்டி அசத்திய காவலர்கள்….

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கலவர தடுப்பு ஒத்திகை நடத்தினர்.