’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

 

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

சில பாதைகள் சேறும் சகதியுமாக இருக்கும். டிரெஸ்ஸில் சேறு படமால் இதை எப்படிக் கடந்து போவது எனக் குழப்பத்தோடு நிற்போம். அப்போது பார்த்தால், எதிரில் அந்தப் பாதையைக் கடந்து வரும் சிலரின் உடையில் சேறு, சகதி ஒட்டாமல் வந்துவிடுவார்கள். அதைப் பார்த்து ஆச்சர்யப்படுவோம். அப்படித்தான் பிக்பாஸில் சண்டை மூட்டிவிடும் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க்கிலும் சிலர் சட்டை கிழியாமல் தப்பித்தார்கள். யார் அவர்கள்… எப்படித் தப்பித்தார்கள் என்பதைக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 52-ம் நாள் தொடர்ச்சி..

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

ஆஜித்க்குப் போன் செய்தார் ரியோ. ரொம்பவே பக்கா ப்ளானோடு ரியோ வந்திருந்ததால் நிதானமாகக் கையாண்டார். முதலில் ஆஜித்தை ஒரு பாட்டு பாடச் சொன்னார். அவர் சூழல் புரியாமல் ‘சரணத்திலிருந்து பாடவா… பல்லவி பாடவா?’னு கேட்டுட்டு இருந்தார். ஏதாச்சும் ஒண்ணு பாடுனு ரியோ சொன்னதும், ’மின்னலே நீ வந்து போன…’ பாடலின் சில வரிகள் பாடினார்.

அதன்பின் ஆஜித்தைக் காப்பாற்றும் சில கேள்விகள். இந்தப் பாடல் கேட்டால் ஒரு ஃபீல் வருதுல்ல… சிலர் வரவே இல்லன்னு சொல்றாங்களே எப்படினு கேட்டு, அவங்க எல்லாம் ஃபேக்னு சொல்ல வைச்சு… இப்படி இழுக்குறாரேன்னு பார்த்தால், அர்ச்சனா அன்பு பொய்யில்லன்னு சொல்றதுக்குத்தான் இந்தச் சுத்தலாம். ஆஹான்.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

வீட்டை விட்டு இங்கே வந்திருக்கும்போது இங்கே இருக்கிறவங்ககிட்ட ஒரு அக்காவையோ, தம்பியையோ எதிர்பார்த்தா என்ன தப்புனு கேட்டு மடக்கினார். வெளியே உட்கார்ந்திருந்த ரம்யா, ‘பாலா கிட்ட கேட்க வேண்டிய கேள்விகளை ஆஜித்கிட்ட கேட்டுட்டு இருக்கார்’னு சொல்லிட்டு இருந்தார்.

ரம்யா சொல்வது உண்மைதான். பாலாவுக்குத்தான் கேள்விகள் எழுதி வைச்சிருப்பார். கால் ரிசிவர் ஒருவர் கிட்ட ஒருவர் மட்டுமே பேச முடியும் என ரூல் இருக்கும்போல. அதனால, பசு மாட்டை தென்னமரத்துல கட்டும் கதையாக அதையெல்லாம் ஆஜித்கிட்ட கேட்டுட்டு இருந்தார்.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

ஆனா, ரியோவின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிட்டு இருந்தார். ஒருவகையில் தன் நடத்தை மீது நேரடியான கேள்வி இல்லாததால் மூன்றாம் மனிதரின் பார்வை எனும் விதத்தில் எளிதாகப் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால், இறுதியில் ரியோவை எலிமேனஷினிலிருந்து காப்பாற்றிய விதம் செம. 5 ஸ்டார்களை ஆஜித்க்கு அளித்தார் ரியோ. ஒருவேளை போனைக் கட் பண்ணாமல் தன்னை நாமினேஷன் செய்ய வைத்திருந்தாலும் 5 ஸ்டார் கொடுத்திருக்கக்கூடும்.

சரியாகத்தான் பதில் சொன்னோமா? என உள்ளே அணத்திட்டு இருந்தார் ஆஜித். வெளியே வந்தபோது ரியோ அண்ட் கோவால் தோளில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார்.

’கேள்விகள் பிடிக்கல… பதில் பிடிச்சிருந்தது’எனச் சொன்னார் ரம்யா. இப்போதைக்கு ரம்யா எந்த அணி என்று கேட்டால், நிச்சயம் அர்ச்சனா அணி இல்லை என்று சொல்லி விடலாம். அதேநேர்ம் பாலா அணியிலும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், பெருங் குழுவாக மாறி அவர்கள் வீட்டை ஆக்ரமிப்பதில் தானாகவே எதிர் குழுவில் சேர வாய்ப்பிருக்கிறது. அதுவும் நேற்று அர்ச்சனா அன்பை நல்ல விதமாகக் காட்ட கேள்விகள் ரம்யாவை உசுப்பேத்தியிருக்கலாம். ஆஜித் மீது எப்போதும் சாஃப்ட் கார்னர் உள்ளவர் ரம்யா. அந்த மனநிலை ரியோ மீது வேறு விதமாக எதிரொலித்தது.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

ஆஜித்திடம் ரியோ பேசும்போது அனிதா – ஷனம் இருவரின் நட்பு பற்றி நல்ல விதமாகத்தான் சொன்னார். ஆனால், அது புரியல… புரியலன்னு ஷனம் அணத்தத் தொடங்கினார். முன் ஜாமின் வாங்குவது மாதிரி, முன் ஆதரவு கோரி பாலாவிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்தார்.

‘என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னீங்க?’னு ரியோ மீது முதல் பஞ்சாயத்தை வைத்தார் ஷனம். வெளியே எப்படி காட்டப்படுவோம்னு கான்ஷியஸா இருக்கிற இரண்டு பேருக்குள்ளும் அழகான ஒரு நட்பு உருவானச்சுனு நல்ல விதமாகத்தான் சொன்னேன்’னு ரியோ சொன்னார். உடனே ஷனம், அனிதாவைப் பார்த்து இவன் பாடிய துதியைக் கவனித்தீரா… என்று அதில் ஒரு குறையைக் கண்டுபிடித்து சண்டையை டெவலப் செய்தார்.

அனிதா இப்போது ஓர் உத்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறார். அதாவது, தான் நேரடியாகச் சண்டை போடுவது இல்லை. போர் தந்திரங்களை தயாரித்து ஷனமை, ஆரியை உசுப்பேத்துவது என்ற உத்திதான் அது. ‘இப்ப ஷனம் கையை முறுக்குவா பாரேன்’னு பசங்க ஸ்டைல்தான். ரியோ மன்னிப்பை கேட்டு முடித்து வைத்தார்.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

ரியோ மீது அடுத்த பஞ்சாயத்தைக் கொண்டு வந்தது ரம்யா. அனிதாவை ஏன் கிச்சன் டீம்லேருந்து தூக்கினீங்க. ‘சமைக்க தெரியாதவங்க.. கிச்சன் டீம்ல இருந்த கரெக்டான நேரத்துக்கு சாப்பாடு வரும்’னு ஆட்டோ கண்ணாடி ஜோக் போல சொல்லிட்டு இருந்தார் ரியோ. அதெப்படி வரும்னு ரம்யா கேட்டதுக்கு போன வாரம் வந்துச்சேனு என்றார்.

‘ஏன் எங்கிட்ட சொல்லல’னு கேட்டதும் அங்கொரு மன்னிப்பைக் கேட்டர்.

அடுத்து சம்யுக்தா பஞ்சாயத்து நேரட்ம் இது. அனிதா கிச்சன்ல இருந்த பாத்திரம் அதிகம் விழும்னு சொன்னது உண்மையா?னு ஒரு குண்டை வீசினார். ஆனா, இது ரியோ மீது அனிதா காண்டுல இருக்கிறார் என்பதைத் தெரிந்து அதை மூட்டிவிட கேட்டதாகவே இருந்தது. ஏன்னா, ரியோ சொல்லப்பட்டதாக சொன்ன தகவலில் அனிதா பேரே இல்லை. இப்படி ஊசி ஏத்தறீங்களே சம்யுக்தா. அங்கேயும் மன்னிப்பை கேட்டு எஸ்கேப்பானார் ரியோ.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

’எங்கிட்ட ரெண்டு கேள்விகள் இருக்கு?’னு ஷிவானி பஞ்சாயத்தைத் தொடங்கினார். ‘ஓ! நீயும் இங்கதான் இருக்கியா? என்பதுபோல பார்த்தார் ரியோ. ’ஆஜித் கிட்டே ஏன் முன்கூட்டியே நீங்கதான் போன் பண்ணபோறீங்கன்னு சொன்னீங்க?’ ‘அவன் ரொம்ப பதற்றமா இருந்தான். அவன் இடத்துல யார் இருந்தாலும் சொல்லியிருப்பேன். அடுத்த கேள்வி?’

’ரமேஷ் தூங்கினா ஏன் எழுப்ப மாட்டேங்கிறீங்க?’ னு கேட்டதும், இப்போ போய் எழுப்பிடறேன்னு போனார் ரியோ. பாலா தூங்கினா, நீயே போய் எழுப்பிடுவன்னு மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு ரியோ.

நிஷாவும் அர்ச்சனாவும் நேற்றைய எப்பிசோட்டில் நிறைய பேசிட்டே இருந்தாங்க. ‘பாட்டு பாடி ஆடி எவ்வளவு நாளாச்சுல’னு வெளியே உலாத்திகிட்டே பேசினாங்க. அப்போ, உள்ளே ஷிவானியின் தோளில் கையைப் போட்டு, கழுத்தை இறுக்கி பிடிச்சிக்கிட்டு பாலா நடந்தார். ‘வா அதேபோல நாமலும் நடப்போம்’னு அர்ச்சனாவும் நிஷாவும் நடந்தார்கள். பாலா, ஷிவானியின் இடுப்பில் இடித்தார். அதேபோல இவர்களும் நடித்தார்கள்.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

காதல் இல்ல… காதல் இல்ல… பாலா சொல்லிட்டு இருக்கிறார். ஆனால், காதலிக்காதவங்க உடல்மொழி இப்படி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். முதலில் பாலாவுக்கு ஃப்ரெண்டானது கேபிதான். அவரிடம் இப்படி நடந்துகொண்டதே இல்லை. சென்ற சீசனில் கவினிடம் இருந்த துணிச்சல்கூட பாலாவிடம் இல்லையே!

வெளியே அர்ச்சனா, ‘நான் இந்த டைட்டிலுக்கு ஆசைப்படலன்னு ஷனம் சொன்னா, எப்போன்னு கேட்டு ஒரு சண்டையப் போடனும். எப்ப பார்த்தாலும் குறும்படம்… குருமா படம்னு கேட்பாளே.. இதுக்கும் போடச் சொல்வோம்’னு நிஷாவிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்.

’ஒருநாள்ல எத்தனை பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கு’ சோர்ந்து போன ரியோ

விளக்குகள் அணைத்தும் பேச்சு வார்த்தைகள் நீண்டது. அர்ச்சனா அண்ட் கோ அவங்க டீம்க்குள்ள யாரையும் நாமினேட் பண்ண மாட்டாங்க. அதனால பாதிக்கப்படறது நீங்களா கூட இருக்கலாம்னு சம்யுக்தாவை உசுப்பேத்திட்டு இருந்தார் பாலா. இரவு அர்ச்சனா டீமோடு உட்கார்ந்து சம்யுக்தா பாட்டுப்பாடிட்டு இருந்தார் அதனால, அவங்க டீம்க்கு சம்யுக்தா போயிடுவாரோன்னு பயத்தோடு பாலா சொல்லியிருக்கலாம். குரூப் ஆர்ட்டிஸ்ட்டாக ஷிவானி அங்கிருந்தார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?

பிக்பாஸ் வீட்டில் புயல் எனச் செய்திகள் வந்தன. ‘அதெல்லாம் இல்ல’னு பிக்கி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனா, ஒருநாள் நிகழ்ச்சியை இரண்டு நாள் இழுஇழுனு இழுக்கிறதைப் பார்த்தால், பிக்கி சொல்றது டவுட்டாத்தான் இருக்கு.