darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



செல்போன்களின் ரிங்டோன் ஒலிக்கும் நேரத்தை நிர்ணயித்த ட்ராய்!

TRAI
TRAI

இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரம் செல்போன்களில்  30 விநாடியாகவும், லேண்ட் லைன் தொலைப்பேசிகளில் ஒரு நிமிடமாகவும் ட்ராய் நிர்ணயம் செய்துள்ளது. 

சில நிறுவனங்கள் இன்கமிங் அழைப்பைத் தவிர்க்க ரிங்டோன்கள் நேரத்தை குறைத்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து இந்த நேர நிர்ணயத்தை ட்ராய் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்கமிங் அழைப்பைத் தவிர்ப்பதன் மூலம் வரும் அழைப்பு மிஸ்டு காலாக மாறும்.  இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்வொர்க்கிலிருந்து அவுட் கோயிங் காலை மேற்கொள்வர்.

Image

இதன் மூலம் அவுட் கோயிங் அழைப்புகள் அதிகரிக்கும். இந்த தந்திரத்தை பல தொலை தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக ட்ராய்க்கு புகார் சென்றுள்ளது. எனவே ரிங்டோன் ஒலிக்கும் நேரத்தை ட்ராய் வகுத்துள்ளது. அதன்படி செல்போன் ரிங்டோன்களுக்கு 30 விநாடியாகவும், லேண்ட் லைன் தொலைப்பேசிக்கு ஒரு நிமிட ரிங்டோன் கால அளவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொலைத்தொடர் நிறுவனங்களும் மேற்கண்ட உத்தரவை பின்பற்றுமாறு ட்ராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.