உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலத்திலிருந்து மோதிரம் திருட்டு : செவிலியருக்கு போலீஸ் வலைவீச்சு!

உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலத்திலிருந்து மோதிரம் திருட்டு : செவிலியருக்கு போலீஸ் வலைவீச்சு!

கொரோனாவால் உயிரிழந்த நோயாளியிடமிருந்து செவிலியர் ஒருவர் மோதிரத்தைத் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலத்திலிருந்து மோதிரம் திருட்டு : செவிலியருக்கு போலீஸ் வலைவீச்சு!

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்தவர் உடலிலிருந்து மோதிரத்தைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட செவிலியரை போலீசார் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலத்திலிருந்து மோதிரம் திருட்டு : செவிலியருக்கு போலீஸ் வலைவீச்சு!

கொரோனா பேரிடர் காலத்திலும் பின்வாங்காமல் தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள் முன்களப் பணியாளர்கள் தான். தங்கள் உயிரை துச்சமென எண்ணி, பொதுமக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதில் இந்தியா முழுவதும் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் எனப் பலரும் உயிர் துறந்துள்ளனர். இப்படியான முன்களப் பணியாளர்கள் மீது நாளுக்கு நாள் மதிப்பும், மரியாதையும் கூடி வருகிறது. இருப்பினும் இதுபோன்ற சிலரின் அருவருக்கத்தக்கச் செயலை என்னவென்று சொல்வது?