கடனை அடைக்க பணத்தை திரட்டிய அம்பானி… ரூ.1.04 லட்சம் கோடி கொடுத்த ஜியோ

 

கடனை அடைக்க பணத்தை திரட்டிய அம்பானி… ரூ.1.04 லட்சம் கோடி கொடுத்த ஜியோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடனை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. அதன் ஒரு பகுதியாக ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து பணத்தை புரட்டுகிறார். முதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக் நிறுவனம் (ரூ.5,666 கோடிக்கு 1.15 சதவீத பங்குகள்), தனியார் முதலீட்டு நிறுவனமான விஸ்தா (ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகள்), ஜெனரல் அட்லாண்டிக் (ரூ.6,598 கோடிக்கு 1.34 சதவீத பங்குகள்), கே.கே.ஆர். நிறுவனம் (ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகள்) ஆகியவை ஜியோவில் முதலீடு செய்தன.

கடனை அடைக்க பணத்தை திரட்டிய அம்பானி… ரூ.1.04 லட்சம் கோடி கொடுத்த ஜியோ

அண்மையில் ஜியோவின் 1.85 சதவீத பங்குகளை ரூ.9,093.6 கோடிக்கு அபுதாபியை சேர்ந்த முபதாலா நிறுவனம் வாங்கியது. இந்த சூழ்நிலையில், சில்வர் லேக் ஜியோவில் மேலும் ரூ.4,546.80 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது. இதனையடுத்து சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் பங்கு மூலதனத்தை 2.08 சதவீதமாக அதிகரித்தது. மேலும் ஏ.டி.ஐ.ஏ. நிறுவனம் ஜியோவில் ரூ.5,683.50 கோடி (1.16 சதவீத பங்குகள்) முதலீடு செய்தது. நேற்று டி.பி.ஜி. கேப்பிட்டல் நிறுவனம் ஜியோவின் 0.93 சதவீத பங்குகளை ரூ.4,546.80 கோடிக்கு வாங்க ஒப்புக்கொண்டது. அதனை தொடர்ந்து நேற்று அமெரிக்காவை சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான எல் கேட்டர்டன் ஜியோவில் ரூ.1,894.50 கோடி முதலீடு செய்து 0.39 சதவீத பங்குகளை வாங்கியது.

கடனை அடைக்க பணத்தை திரட்டிய அம்பானி… ரூ.1.04 லட்சம் கோடி கொடுத்த ஜியோ

ஆக, கடந்த எட்டே வாரத்தில் முகேஷ் அம்பானி ஜியோவின் 22.38 சதவீத பங்குகளை பத்து ஒப்பந்தங்கள் வாயிலாக விற்பனை செய்து மொத்தம் ரூ.1.04 லட்சம் கோடி திரட்டி விட்டார். இது தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அண்மையில் உரிமை பங்கு வெளியீடு மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் ரூ.53 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கும். இதில் 75 சதவீதத்தை கடனை அடைக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, முகேஷ் அம்பானி கடனை அடைக்க தேவையான பணத்தை திரட்டும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கிணறை தாண்டி விட்டார். விரைவில் முழு கிணறையும் தாண்டி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.