கொரோனாவால் பிசினஸ் சரியில்லை.. ஒரு வருஷ சம்பளத்தை விட்டு கொடுத்த முகேஷ் அம்பானி

 

கொரோனாவால் பிசினஸ் சரியில்லை.. ஒரு வருஷ சம்பளத்தை விட்டு கொடுத்த முகேஷ் அம்பானி

கொரோனாவால் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து முகேஷ் அம்பானி சம்பளம் வாங்கி கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, முந்தைய நிதியாண்டில் தனது நிறுவனத்திடமிருந்து சம்பளமாக ரூ.15 கோடி வாங்கி இருந்தார். கடந்த 2008-09ம் நிதியாண்டு முதல் ஆண்டு சம்பளமாக ரூ.15 கோடியை முகேஷ் அம்பானி வாங்கி வந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக 2020-21ம் நிதியாண்டில் முகேஷ் அம்பானிக்கு சம்பளமாக எதுவும் வழங்கவில்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பிசினஸ் சரியில்லை.. ஒரு வருஷ சம்பளத்தை விட்டு கொடுத்த முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

2020 ஜூன் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நம் நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக, நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் தொழில்துறை நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி தன்னுடைய சம்பளத்தை கைவிட (வேண்டாம்) தானா முன்வந்து முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பிசினஸ் சரியில்லை.. ஒரு வருஷ சம்பளத்தை விட்டு கொடுத்த முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் உறவினர்கள் நிகில் மற்றும் ஹிடால் மெஸ்வானி ஆகியோரின் ஆண்டு வருமானமாக ரூ.24 கோடி பெற்றுள்ளனர். இதில் ரூ.17.28 கோடி கமிஷனும் அடங்கும். முகேஷ் அம்பானியை தவிர்த்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் மெஸ்வானி சகோதரர்கள், பி.எம்.எஸ். பிரசாத் மற்றும் கபில் ஆகியோர் முழு நேர இயக்குனர்களாக உள்ளனர்.