ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

 

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மக்கள் பெரும் இன்னலை சந்தித்தனர் என்றே சொல்ல வேண்டும். ஒரு நாள் வீட்டில் இருக்க மாட்டோமோ என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த மக்களை, மாதக் கணக்கில் வீட்டிலேயே முடக்கி வைத்து விட்டது கொரோனா வைரஸ். இக்காலக்கட்டத்தில், இளம் வயதினருக்கு கைக் கொடுத்த ஒரே விஷயம் மொபைலும் அதில் இருக்கும் செயலிகளும் தான்.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் அதிகளவில் இன்ஸ்டாகிராம், டிக் டாக், ஜூம், நெட்ப்ளிக்ஸ், யூடியூப் உள்ளிட்ட செயலிகளை உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில் பாதுகாப்புக்கு அந்த செயலிகள் ஊறுவிளைவிப்பதாகக் கூறி மத்திய அரசு பல செயலிகளுக்கு தடை விதித்து இளைஞர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, பப்ஜி செயலியும் தடை செய்யப்பட்டது. இது போன்று, இந்த ஆண்டில் நடந்த செயலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

சீனாவுடன் மோதல்:

கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவம் மத்திய அரசின் கோபத்தை தூண்டி விட்டது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்தார். உடன்படுக்கையை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், மீண்டும் மீண்டும் சீன ராணுவம் லடாக் எல்லையில் அத்துமீறியது.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

59 செயலிகளுக்கு தடை:

சீனாவின் இந்த தாக்குதலால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட செயலிகளும் இதில் அடங்கும். சீனாவுடன் எந்த தகவலையும் பகிர மாட்டோம், அனுமதி வழங்குங்கள் என்று தடை செய்யப்பட்ட செயலி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதனை ஏற்க மறுத்தது.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

சோகக் கடலில் மூழ்கிய டிக் டாக் வாசிகள்:

கடந்த ஓரிரு ஆண்டுகளில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற செயலிகளுள் ஒன்று. சீன நிறுவனத்தின் இந்த டிக் டாக் செயலியை, அதிகளவில் இந்தியர்கள் தான் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. காலை முதல் மாலை வரை டிக் டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த டிக் டாக் வாசிகளால், செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்ள முடியாமல் சோகக்கடலில் மூழ்கினர். மீண்டும் டிக் டாக்கிற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு சிலர் கோரிக்கை வைத்தனர். அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததால், டிக் டாக் செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு ஒரு எண்ட் கார்டு போடப்பட்டது.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

பப்ஜி செயலி தடை:

பொதுமுடக்கத்தின் போது இளைஞர்களின் ஒரு உலகமாகவே பப்ஜி கேம் இருந்து வந்தது. நாடு முழுவதிலும் சுமார் 60 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தார்களாம். இந்தியாவில் மட்டும் 17.5 கோடி முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்ததாம். இந்த செயலியால் ரூ. 9,731 கோடி சர்வதேச அளவில் வருமானம் கிடைக்கப்பெற்றதாக தெரிகிறது. இவ்வாறு இளைஞர்களை கவர்ந்திழுத்து, வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இந்த செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என போர்குரல்கள் எழுந்தன.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

பப்ஜி செயலி தென் கொரிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அதற்கு தடை விதிக்க தயக்கம் காட்டிய மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பப்ஜிக்கு தடை விதித்து இளைஞர்களுக்கு அடுத்த ஷாக் கொடுத்தது.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

மேலும் 43 செயலிகளுக்கு தடை:

சீன உடனான மோதலால் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க தீவிரம் காட்டிய மத்திய அரசு டிக் டாக், ஷேர் சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு முதற்கட்டமாக தடை விதித்தது என்பதை மேலே கண்ட செய்தித் தொகுப்பில் பார்த்திருந்தோம். உடன் படுக்கைகளை மீறி சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால், கடந்த மாதம் மேலும் 43 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

ஆன்லைன் ரம்மி:

டிக் டாக், பப்ஜியை போன்று இளைஞர்களை அதிகளவில் வலையில் வீழ்த்திய ஆப் ஆன்லைன் ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதில் ஆயிரக் கணக்கில் பணம் போட்டு விளையாடி, இளைஞர்கள் பரிதவித்த கதைகள் தான் அதிகம். ‘அதிகமாக பணம் சம்பாதிக்கலாம்’ என்று டிவியிலும் இணையதளத்திலும் வரும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை பார்த்து பல இளைஞர்கள் அந்த செயலியில் மூழ்கத் தொடங்கினர். கடன் வாங்கி, ரம்மி விளையாடும் அளவிற்கு ரம்மியால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர்.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்:

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியை விளையாடிய இளைஞர்கள், அந்த கடனை அடைக்க வேறு ஒரு இடத்தில் கடன் வாங்கி அதையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவின் பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மியால், இளைஞர்கள் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். அடுத்தடுத்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. குறிப்பாக 20 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரீவைண்ட் 2020 – ‘டிக் டாக் தடை’ முதல் ஆன்லைன் ரம்மி தற்கொலை வரை..

ஆன்லைன் ரம்மியால் பலரின் குடும்பங்களின் நிலை கேள்விக் குறியாகி இருக்கும் சூழலில், ரம்மிக்கு தடை விதித்தே ஆக வேண்டும் என அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குரலெழுப்பினர். இதனை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றாலும் தமிழக அரசு ‘ஆன்லைன் ரம்மி’க்கு தடை விதித்து அவசர சட்டத்தை பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபலமான செயலிகள் மீதும் புகார் எழுந்திருக்கிறது.

இவ்வாறு இந்த ஆண்டு, செயலிகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் டிக் டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டதை பலர் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இதே போன்று தொழில்நுட்ப ரீதியாக மட்டுமின்றி யாரும் மறக்க முடியாத வண்ணம், பல நினைவலைகளை கொடுத்திருக்கிறது 2020…