வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழு கூட்டம்

 

வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழு கூட்டம்

திருவள்ளூர்

திருவள்ளூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், பொதுச்செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், காலமுறை ஊதியம், பொங்கல் போனசை டி பிரிவ ஊழியர்களுக்கு வழங்குவது போல் நாட்கணக்கில் வழங்குதல், ஜமாபந்தி பணிகளை மேற்கொள்ளும் கிராம உதவியாளர்களுக்கு படி வழங்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழு கூட்டம்

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது, கிராம ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுதாக அமைச்சர்கள் உறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் எச்சரித்தனர்.