பழிக்குபழியாக நடந்த மருகால்குறிச்சி படுகொலை சம்பவம்: நெல்லையில் பதற்றம்

 

பழிக்குபழியாக நடந்த மருகால்குறிச்சி படுகொலை சம்பவம்: நெல்லையில் பதற்றம்

முன்விரோதம் காரணமாக மருகால்குறிச்சியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பதற்றம் நிலவுகிறது.

பழிக்குபழியாக நடந்த மருகால்குறிச்சி படுகொலை சம்பவம்: நெல்லையில் பதற்றம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாசலம் மகன் நம்பிராஜன் என்பவர் கடந்த 2019 நவம்பர் மாதம் அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் மகள் வான்மதி என்பவரை காதல் திருமணம் செய்த 10 நாட்களில் மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் டவுண் வயல்தெருவில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2020 மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்கள் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை நம்பிராஜன் தரப்பினர் கொலை செய்தனர். இதற்கு பழியாக இன்று பிற்பகல் மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் தாயார் சண்முகதாய் மற்றும் சகோதரி சாந்தி ஆகியோரை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

பழிக்குபழியாக நடந்த மருகால்குறிச்சி படுகொலை சம்பவம்: நெல்லையில் பதற்றம்

முதலில் சாந்தியின் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பல் அவரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தலையுடன் அருணாசலம் -சண்முகத்தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். அருணாசலம் தப்பியோடிய நிலையில் சண்முகத்தாய் வீட்டின் கழிவறையில் ஒழிந்து கொண்டதாக தெரிகிறது. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு ஊரின் நடுவே சாந்தியின் தலையை வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

12 பேர் கொண்ட மர்ம கும்பல் முக்கவசம் அணிந்து ஊர் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடி குண்டுகளை வீசி கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.

பழிக்குபழியாக நடந்த மருகால்குறிச்சி படுகொலை சம்பவம்: நெல்லையில் பதற்றம்

சண்முகத்தாய் தலையை வெட்டி ஊர் மத்தியில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாங்குநேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் சாந்தியின் 3 வயது மகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நாங்குநேரி சுங்கசாவடி சிசிடிவி காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஊர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல்லையில் பதற்றம் நிலவுகிறது.