ஓய்வு பெற்ற பார்த்தீவ் பட்டேலுக்கு கிடைத்த சூப்பர் பதவி!

 

ஓய்வு பெற்ற பார்த்தீவ் பட்டேலுக்கு கிடைத்த சூப்பர் பதவி!

இந்திய விக்கெட் கீப்பர்களில் பார்த்தீவ் பட்டேலுக்கு தனி இடம் உண்டு. இந்திய விக்கெட் கீப்பர்களில் நயன் மோங்கியாவுக்குப் பிறகு நிலைத்தது பார்தீவ் பட்டேல்தான். 2003 லிருந்து இவர் இந்திய அணியில் இருந்து வந்தார்.

27 ஒருநாள் போட்டிகளில் கீப்பராக விளையாடிய பார்தீவ் 30 கேட்ச்களைப் பிடித்துள்ளார். 25 டெஸ்ட் மேட்ச்களிலும் விளையாடி உள்ளார். அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும்போது ரன்கள் அடித்தும் உதவியுள்ளார்.

ஓய்வு பெற்ற பார்த்தீவ் பட்டேலுக்கு கிடைத்த சூப்பர் பதவி!

அதன்பின், சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி அணி, டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் அணி என ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்றார். 2020 ஆம் ஆண்டில் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

தோனி பேட்டிங், கேப்டன்ஷிப் என வேற லெவலில் அவர் வளர்ந்துகொண்டிருந்தார். தோனியின் பெரும் வெளிச்சத்தில் கரைந்துபோன விக்கெட் கீப்பர்களில் பார்தீவ் பட்டேலும் ஒருவர். சில நாட்களுக்கு பார்தீவ் பட்டேல், அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் முழுமையாக ஓய்வை அறிவித்துள்ளார். அதற்கு முக்கியக் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் இருந்தார். ஆனால், ஒரு போட்டியில்கூட அவர் ஆட கேப்டன் கோலி வாய்ப்பு தர வில்லை. இதனால், கசப்புடன் ஓய்வெடுத்ததாகக் கூறப்பட்டது.

ஓய்வு பெற்ற பார்த்தீவ் பட்டேலுக்கு கிடைத்த சூப்பர் பதவி!

இந்நிலையில் பார்த்தீவ் பட்டேலுக்கு நல்ல பொறுப்பு கிடைத்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை கோப்பையை வென்றது மும்பை இண்டியன்ஸ் அணிதான். அதனால் அதன் மீதான் கவனிப்பு எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த அணியில் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முக்கியப் பொறுப்பு பார்த்தீவ் பட்டேலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.