ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

 

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் ஓய்வுபெறவிருக்கும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை கொடுக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது என்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் களப்பணியை தொடங்கிவிட்டன.

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

இதனிடையே, தமிழக தேர்தல் ஆணையமும் வாக்குச்சாவடிகள், வாக்குப்பட்டியல் மற்றும் இயந்திரங்களை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாகவும், உற்று நோக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், தேர்தலில் குழப்பங்களை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.