• April
    05
    Sunday

Main Area

Main



பா.ஜ.க-விலா... நானா? சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மறுப்பு!

justice jayachandran
justice jayachandran

சென்னை உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார் என்று வெளியான தகவலை நீதிபதி ஜெயச்சந்திரன் மறுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேசியிருந்தார். தற்போது, அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துவிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தகவலை ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த ஜூலை 6ம் தேதி நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து சட்டம் சார்ந்த பில முக்கிய பிரச்னைகள் குறித்து பேசினேன். சட்டம் தொடர்பான விஷயத்தை பேச மட்டுமே அங்கு சென்றேன். எந்த ஒரு கட்சியிலும் நான் இணையவில்லை" என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.