இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறார்… முன்னாள் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு..

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறார்… முன்னாள் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில், லடாக்கில் இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளாத என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய-சீன விவகாரத்தில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறார் என ஓய்வு பெற்ற முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.என். சிங் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ராகுல் காந்தியின் அறிக்கை உண்மையிலிருந்து முற்றிலும் விலகி உள்ளது.

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறார்… முன்னாள் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு..

எல்லை விவகாரங்கள் முற்றிலும் ரகசியமானவை மற்றும் மக்களிடம் வெளிப்படுதத முடியாது என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும். அவர் அரசை ஆதரித்து இருக்க வேண்டும். இறுதி முடிவுகளை மக்கள் தெரிந்து கொள்வார்கள். ராகுல் காந்தி அரசை ஆதரிக்க வேண்டும். அவர் முதிர்ச்சியற்ற மற்றும் புரிந்துகொள்ள முடியாத நபராக தோற்றமளிக்கிறார். அமைதியான வழியில எல்லாம் தீர்க்கப்படும் மற்றும் நீண்ட கால தீர்வை இரு நாடுகளும் கண்டுபிடிக்கும்.சீனா முன்முயற்சி எடுத்தது மற்றும் லடாக்கின் பிங்கர் பகுதியில் அவர்கள் தங்களது படைகளை முன்நோக்கி நகர்த்தினார்கள். ஆகையால் அவர்கள் அதனை செய்ததால் இயல்பாக நமது படைகள் உடனடியாக பதில் நடவடிக்கை எடுத்தார்கள். பின்னர் ஒரு முட்டுக்கட்டை இருந்தது.

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறார்… முன்னாள் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு..

சீனா எல்லை நடவடிக்கை எடுத்தற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கொரோனா வைரஸ் விவகாரத்தில் அந்நாடு அவதூறை பெற்றது. இதிலிருந்து உலக கவனத்தை திசை திருப்ப அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவுக்கு உலக அங்கீகாரம் உள்ளது மற்றும் அவர்கள் இந்தியா இலக்காக வைப்பது சிறந்தது என அவர்கள் நினைத்தார்கள். எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளும் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிராகரித்தன. இரு தரப்பு ராணுவ தரப்பு அதிகாரிகள் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளும் தங்களது துருப்புகளை 2.5 கி.மீட்டர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்த்தி விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.