கோயம்பேட்டில் வரும் திங்கள் வரை சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி!

 

கோயம்பேட்டில் வரும் திங்கள் வரை சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது பிரச்சினையை ஏற்படுத்தியது.

கோயம்பேட்டில் வரும் திங்கள் வரை சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி!

இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று கூறி கோயம்பேடு சில்லரை வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாக அலுவலகத்தை (சி.எம்.டி.ஏ.) முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுலவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் திங்கள் வரை (ஏப்ரல் 12) சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் உடன்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் வரும் திங்கள் வரை சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதி!

கடந்த ஆண்டு சென்னை கோயம்பேடு சந்தை முற்றிலுமாக மூடப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சிறு வியாபாரிகள் பொருளாதார ரீதியில் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பின்னர் கொரோனா தீவிரம் குறைந்த வந்த நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு 8 மாதங்கள் கழித்துதான் முழுமையாக திறந்துவிடப்பட்டது. சுமார் 1,800க்கும் மேற்பட்ட சிறியரக காய்கறி கடைகள், 850க்கும் மேற்பட்ட பழக்கடைகள் கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கின்றன. இங்கு 2,000க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியே இருக்கின்றனர்.